குமரியில் சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

குமரியில் சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்றார்.

Update: 2024-01-14 15:42 GMT
விழாவை துவக்கிய கலெக்டர், எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் சந்தையடி ஊர் பொதுமக்கள் இணைந்து இன்று (நடத்திய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,  முன்னிலையில்,  குடும்பத்துடன் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கலெக்டர் பேசுகையில்,  101 மண்பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு  படைக்கப்பட்டது. 

இப்பொங்கல் விழாவில் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா உட்பட 49-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாத்துறை மூலம் சந்தையடி கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து,

சந்தையடி கிராம பொதுமக்களோடு இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.          இவ்விழாவில் தமிழக பாரம்பரியமான பல்வேறு விதமான கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டிமேளம், செண்டை மேளம், தப்பாட்டம்,     

 மகுட ஆட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, ஒயிலாட்டம்  மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் தயாரித்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி மற்றும் கபடி போட்டிகள்  சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டது. 

 இந்த வாய்ப்பினை அளித்த சந்தையடி ஊர் மக்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். எனபேசினார். 

 நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், கலெக்டரின்  மனைவி விஜேதா அன்னி மல்லா, மகன்கள்  அகஸ்தியா, விதாட், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்  ஆனந்த்மோகன்,  உதவி ஆட்சியர் (பயிற்சி)  ரஜத் பீட்டன்,  உதவி வன அலுவலர் (பயிற்சி) வித்யாதர், இ.வ.ப., மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார், சந்தையடி கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News