பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாமில் ஆட்சியர் பங்கேற்பு !

ஜோலார்பேட்டை அருகே பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாமில் ஆட்சியர் ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கேற்றார்.

Update: 2024-07-06 08:45 GMT

 ஆட்சியர் தர்ப்பகராஜ் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாமில் ஆட்சியர் பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூர் ஊராட்சியில் பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை பராமரிப்பாளர்களுகள் மற்றும் உரிமையாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பின்னர் அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு பால்வளத்துறை சார்பில் என்ன என்ன திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து எடுத்து கூறினர் அப்போது கால்நடை உதவி இயக்குனர் முரளி சாதானந்தம் கால்நடைகளுக்காக வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் அதனை எவ்வாறு பராமரிப்பது, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்தும் பேசினார் அப்போது மேலும் பால் எவ்வாறு கரப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு கற்றுத் தரப்படும் எனவும் கூறினார். இதனைக் கூர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பின்னர் பேசும் போது கால்நடை உதவி இயக்குனர் கூறியது என்னை 20 நிமிடமாக வியப்பில் இருந்து மீண்டு வரவில்லை ஏனென்றால் இந்த முகாமில் தாய்மார்களை அமர வைத்து பால் எவ்வாறு கரப்பது என்பது குறித்தும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறினார் இந்த பேச்சு என்னை அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராத சூழ்நிலையை ஏற்படுத்தியது. என பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ 9 லட்சம் ரூபாயை 25 பயனாளிகளுக்கு தலா ரூ.36 ஆயிரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Tags:    

Similar News