பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.

Update: 2024-03-30 06:41 GMT

ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம், லேணாவிளக்கு அருகில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் புவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News