மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

பெரம்பலூர் அருகே கல்பாடி கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-25 14:04 GMT

மரம் நடும் விழா

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி ஊராட்சியில் உள்ள கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2.5 ஏக்கர் இடத்தில் புங்கன், நீர்மருது உள்ளிட்ட 04 வகையான 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மரக்கன்றுகள் நடும் பணிகளை ஒரு இயக்கமாகவே மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.

அதனடிப்படையில்,பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி ஊராட்சியில் உள்ள கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 500 எண்ணிக்கையிலான புங்கன் நீர்மருது என மொத்தம் 700 மரக்கன்றுகளை சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் நடுவதற்கு முழு அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து தேவையான தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகள் மரமாகும் வரை முறையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார் .

இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் பெர்னார்ட், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், மற்றும் வனச்சரகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News