வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

சாத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-04-07 07:22 GMT

வாக்காளர் விழிப்புணர்வு 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விசிறியினையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மதுரை சாலை வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News