விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!
திமிரில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-15 05:56 GMT
நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மையமாக்கள் திட்டம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் குறித்து பேசினார்.
பின்னர் பயிற்சி கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் இளஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.