நல திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வளர்மதி வழங்கினார்.

Update: 2024-06-28 04:43 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் வளர்மதி

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் ரூ.2.72 கோடி மதிப்பீட்டில் 1328 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி மற்றும் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News