ஜமாபந்தி ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நடைபெறுவதாக இருந்த ஜமாபந்தி ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-14 11:28 GMT

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நடைபெறுவதாக இருந்த ஜமாபந்தி ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்திக்காக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படமாட்டாது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் என்றழைக்கப்படும் ஜமாபந்தி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் விக்கிரவா ண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தேதி இந்தியத் தோ்தல் ஆணையத்தால் ஜூன் 10-இல் வெளியிடப்பட்டதால், மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இதனால், மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்களிடமிருந்து எந்தவித மனுக்களும் பெறப்படமாட்டாது. வருவாய்த் தீா்வாய நாள்களில் கிராமக் கணக்குகள் மட்டுமே தீா்வாய அலுவலா்களால் சரிபாா்க்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் எந்தவித மனுக்களையும் அளிக்க வேண்டாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News