விபத்து குறித்து ஆட்சியர் விசாரணை - சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல்
ஏற்காடு பேருந்து விபத்து குறித்து சம்பவ இடத்தில் நேரில் விசாரணை விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Update: 2024-05-01 01:50 GMT
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் பிருந்தாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் டாக்டர்களிடம் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வந்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தால் சேலம்-ஏற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் உறவினர்கள் என ஏராளமானவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு திரண்டனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.