கனமழையிலிருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்து ஆட்சியர் அறிவிப்பு !!

கனமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை தோட்டப்பயிர் பயிரிடும் விவசாயிகள் பின்பற்றி பயிர்களை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்.

Update: 2024-05-25 09:49 GMT

ஆட்சியர் கற்பகம்

கனமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை தோட்டப்பயிர் பயிரிடும் விவசாயிகள் பின்பற்றி பயிர்களை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதகவலில் பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கனமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை தோட்டப்பயிர் பயிரிடும் விவசாயிகள் பின்பற்றிட வேண்டும்.

பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில் அமைத்துள்ள விவசாயிகள் அவற்றின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும் மற்றும் அருகில் இருக்கும் மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

மேலும், பிரதான பழப் பயிர்களான மா, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி, வாழை பயிரிடப்படும் விவசாயிகள் மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும்.

மேலும் இதர தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, மஞ்சள், கருணைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும் அனைத்து வயல்களிலும் பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News