விருதுநகரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரலையை ஆட்சியர் பார்வை

விருதுநகரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழா நேரலையில் ஒளிப்பரப்பட்டதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

Update: 2024-01-08 09:57 GMT
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழாவினை நேரலையில் ஒளிப்பரப்பட்டதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றிய நிகழ்வை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேரலையில் ஒளிப்பரப்பட்டதை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பார்வையிட்டார்.

தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளில் முனைப்புடன் செயல்பட தமிழ்நாடு அரசானது 07.01.2024 மற்றும் 08.01.2024 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னை உலக வர்த்தக மையத்தில் நடத்தி வருகிறது. இதன் மூலம் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளையும் உள்நாட்டு முதலீடுகளையும் பெருமளவில் ஈர்த்து தமிழ்நாட்டினை தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மட்டுமல்லாமல் பெருவாரியான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

அதன்படி,விருதுநகர் மாவட்டத்தில் 138 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1677/- கோடிக்கும் மேலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் அளவிலான வணிகத்தினை தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் ஏற்படுத்தும் தொலைநோக்குப் பார்வையினை குறிக்கோளாகக் கொண்ட தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முனைவோர்களின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்காக நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கியத்துவத்தினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 7 அன்று சென்னையில் தொடங்கி வைக்கும் இம்மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியினை விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள், வணிகர்களின் கூட்டமைப்புகள், தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள நிறுவனங்கள், அனைத்து பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழில்பயிற்சி நிலையங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் ஆகிய அனைத்து அமைப்புகளில் உள்ள தொழில் முனைவோர்கள்,


தொழிலதிபர்கள், வணிகர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சியினை அறிந்து கொண்டனர். மேலும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள இந்நிகழ்வானது https://tngim2024.com என்ற இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News