பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவிய கண்காட்சியை திறந்து வைத்த ஆட்சியர்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபட்ட ஓவியக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நுண்கலை பயிற்சி முகாமில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபபட்ட ஒவியங்களின் கண்காட்சியினை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தசௌ சங்கீதா மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தெரிவித்ததாவது,
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய அரசு / அரசு பெறும் பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான உண்டு உறைவிட கோடைகால பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும், திறனும் உள்ள 100 மாணவர்களை தேர்வு செய்து, மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் விதமாக, , இசை, தலைமைப்பண்பு, ஸ்போக்கன் இங்கிலீஸ், நுண்கலை, திருக்குறள் முற்றோதல் ஆகிய பயிற்சி முகாம்கள் 02.05.2024 முதல் 11.05.2024 வரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, கோடை கால நுண்கலை பயிற்சி முகாமில் சிறந்த ஓவிய ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர். அதில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட சிறந்த எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், பழங்குடி ஓவியங்கள்;(Warli Painting), துணி ஓவியங்கள், காகித அச்சுக்கலை ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், கோடுகளால் வரையபட்ட ஓவியங்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட ஒவியங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஒவியக்கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்து ஒவியக் கண்காட்சியானது 01.06.2024 முதல் 15.06.2024 வரை 15 நாட்களுக்கு நடைபெறும். எனவே, இந்த அருமையான படைப்புகளை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,அனைத்து பொதுமக்களும், மாணவ / மாணவியர்களும் இந்த ஓவியக்கண்காட்சியினை பார்வையிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.