கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்!

கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்!

Update: 2024-07-04 09:31 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினருடன் 100கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மீது புலன் விசாரணை நடத்த கோரியும், தேர்வு நடத்தும் பணியிலிருந்து தேசிய தேர்வு முகமை வெளியேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் வௌி மாநிலங்களில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 மையங்களில் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வழக்கம் போல் ஜூன் 14ம் தேதி வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது மக்களவை தேர்தல் முடிவுகள் வௌியான ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகளும் வௌியாகின.இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வெழுதிய 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது போன்ற விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கில், “நீட் தேர்வை நடத்துவதில் எந்த ஒரு அலட்சியம் இருக்க கூடாது. இந்த தேர்வில் சிறு தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை என முதலில் மறுப்பு தெரிவித்து வந்த ஒன்றிய அரசு, பின்னர் சில இடங்களில் தவறுகள் நடந்ததாக ஒப்பு கொண்டது. இந்த விவகாரத்தில் பீகாரில் 13 பேர், குஜராத்தில் 5 பேர் என மாநில காவல்துறைகளால் சிலர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசு தேசிய தேர்வு முகமைகளின் தலைவர் சுபோத் சிங்கை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்தி வரும் சிபிஐ 2 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு 100கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மீது புலன் விசாரணை நடத்த வேண்டும் இந்த தேர்வு நடத்தும் பணியிலிருந்து தேசிய தேர்வு முகமை வெளியேற்ற வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News