வீரசோழன்கிராமத்தில் விஜயகாந்த் மறைவை அனுசரிக்கும் விதமாக நினைவேந்தல்

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவை அனுசரிக்கும் விதமாக நினைவேந்தல் நடைபெற்றது.;

Update: 2024-01-29 12:32 GMT

அன்னதானம் வழங்கல்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்து பல நாட்கள் ஆகியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை அவரது நினைவை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

   இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் நடைபெற்றது.

Advertisement

  இந்நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் T.நத்ததுபட்டி ராமர் பாண்டி பரிந்துரையின்படி நரிக்குடி ஒன்றிய செயலாளர் குஞ்சரம் தலைமையில் கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துலட்சுமி அருப்புக்கோட்டை ஒன்றிய அவைத்தலைவர் R .கணேசன் மல்லாங்கிணர் பேரூர் கழக செல்வம் மாவட்ட பிரதிநிதி முன்னாள் நரிக்குடி ஒன்றிய பொருளாளர் அல்லி முத்து மற்றும் கிளை கழக நிர்வாகிகளும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் கிராம பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News