பெரம்பலூர் அரசு கல்லூரியில் கட்டிடங்கள் கட்டும் பணி துவக்கம்
பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி துவங்கியது.
பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டியும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றி சேவையைகாணொளி காட்சி வழியாக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 27ம் தேதி , மாலை 6 மணி அளவில் சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி சேவையினை பயன்பாட்டிற்கும் கொண்டு வந்தார், அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கற்பகம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தினைப் பார்வையிட்டு, பணிகளை தொடங்கிவைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி, பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.179 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றி பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் 13,105 மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளில் குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற் பொறியாளர் அசோக் குமார், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் பெரம்பலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்