திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் தொடக்கம்

திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-30 09:59 GMT

திடக்கழிவு மேலாண்மை பணிகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இதன் பரப்பளவு 12.23 ஏக்கர் ஆகும். இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனாலும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் மட்டுமல்லாமல் அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்தும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இங்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு சுமார் 4 லட்சம் டன் குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 இலட்சம் கன மீட்டர் அளவிலான பழைய குப்பைகள் துாய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.1316 இலட்சம் மதிப்பீட்டில் உயிரி அகழ்வு முறையில் ( Bio Mining) ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக உள்ள 1,10,000 கன மீட்டர் திடக்கழிவுகளை இரண்டாம் கட்டமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.745 இலட்சம் மதிப்பீட்டில் பையோமைனிங் முறையில் அகற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Gorantla Geosynthetics Pvt Ltd, சென்னை நிறுவனத்திற்கு கடந்த 17.4.2023 இல் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் இயந்திரங்கள் நிறுவும் பணி, மின் இணைப்பு மற்றும் Panel Board அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் இன்று முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணியினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் மண்டல தலைவர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர் கிருபாகரன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் இப்பணி முடிவுற்ற பின் பழனி சாலை முருகபவனத்தில் 12.23 ஏக்கர் நிலம் மீட்டு எடுக்கப்பட்டு பிற பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News