கச்சிராபாலத்தில் கோவில் நிலங்களை அளவிட பணி துவக்கம்
Update: 2024-01-03 11:49 GMT
நிலங்களை அளவிட பணி துவக்கம்
கச்சிராயபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கோவில் நிலங்களை மீட்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரதராஜ பெருமாள் கோவில் நிலங்களை அளவீடு செய்து, எல்லைகல் நடும் பணி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.