ஒழுங்கினாசேரி பாலம் வழியாக போக்குவரத்து தொடக்கம்
24 நாட்களுக்குப் பின் ஒழுங்கினாசேரி பாலம் வழியாக போக்குவரத்து தொடக்கம்
Update: 2024-02-20 11:51 GMT
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவில், ஒழுகினாசேரி சந்திப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காகவும், பழைய பாலத்தின் கீழ் தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும் என்பதாலும், கடந்த மாத 28ஆம் தேதி முதல் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் நாகர்கோவில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு வந்த பஸ்கள் மாற்றுப் பாதை வழியாக இயக்கப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று 20ஆம் தேதி முதல் ஒழுகினசேரி வழியாக போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் விதிமுறைகளின் படி முதற்கட்டமாக இன்று காலை 6 மணி முதல் 24 நாளைக்கு பின் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக போக்குவரத்து தொடங்கியது. இதனால் நகரில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த போக்குவரத்து நெருக்கடி கட்டுக்குள் வந்தது.