சமூக வலைதளத்தில் கருத்து பதிவு: பதபெதிக பொறுப்பாளர் கைது

சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக தபெதிக பொறுப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.;

Update: 2024-02-08 14:46 GMT

கைதானவர்

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகப் பொறுப்பாளராக இருப்பவர் ரஞ்சித்.இவர் சமூக வலைதளங்களில் பழனி கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும் செல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் முகநூலில் இதை பார்த்த பாரத் சேனா அமைப்பின் மாநில துணை தலைவர் ருத்ரமுத்து என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ரஞ்சித்தை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத நம்பிக்கைகளை அவமதித்தல் பிரிவின் கீழ் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News