திருமங்கலத்தில் மனவிரக்தியில் வணிகவரித்துறை பெண் அதிகாரி தற்கொலை

திருமங்கலத்தில் மனவிரக்தியில் வணிகவரித்துறை பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-05-21 14:45 GMT

தற்கொலை செய்து கொண்ட அதிரிகாரி

திருமங்கலத்தில் மனவிரக்தியில் வணிகவரித்துறை பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை திருமங்கலம் வணிகவரித்துறை பெண் அதிகாரி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தனியார் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் பாண்டி என்பவரது மனைவி தங்க ராணி 33 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான பாரதி என்பவரது மருமகளான தங்கராணி திருமங்கலம் வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்கராணி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றும் புற்றுநோய் குணமாகாததால் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை கணவர் ரமேஷ் பாண்டி வேலைக்கு சென்று நிலையில் வீட்டு அறைக்குள் சென்ற ஓய்வெடுப்பதாக தனது மாமனார் பாரதியிடம் சொல்லிவிட்டு கதவை தாழிட்டுக் கொண்ட தங்கராணி வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் ரமேஷ் பாண்டியின் தாயார் மற்றும் தந்தை பாரதி கதவைத் தட்டி உள்ளனர்.

கதவை திறக்காது கண்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து பார்த்த போது தங்க ராணி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் இறந்த தங்கராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தங்கராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான கலால் வரித்துறை அதிகாரி மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News