ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-06-27 03:04 GMT
ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் solid waste Management System (SWMS) மூலம் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களை தானாக எடை போட்டு புகைப்படம் எடுப்பது மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.