திருப்பூர் மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் கமிஷனர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி பள்ளிகளில் அமைக்க உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-31 16:58 GMT

ஆய்வு செய்த கமிஷனர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர்  திருப்பூர் , பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ராயபுரம்,  ஓடக்காடு, காலேஜ் ரோடு மாஸ்கோ, சந்திர காவி பள்ளி, மங்கலம் ரோடு,

பாரப்பாளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சி பள்ளியில் அமைக்க உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்துகருவம்பாளையம் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி மாணவ,

மாணவியர்களிடம் தேர்வு குறித்து கேட்டறிந்து அறிவுறை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்துஅடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஓடக்காடு மாநகராட்சி பள்ளிக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணிநேரம் குறித்து கேட்டறிந்து வெயில் காலம் தொடங்கி விட்டதால் தொப்பி, கையுறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தவும், அவர்களின் உடல்நலன் கருதி தண்ணீர் அடிக்கடி பருகவும் அறிவுறுத்தினார்.

அப்போது உதவி ஆணையாளர்கள் வினோத் (மண்டலம் 3&4), தேர்தல் துணை வட்டாச்சியர் வசந்தா, இளநிலை பொறியாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News