359 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்
மதுரையில் தொலைந்து போன 359 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 359 நபர்களுக்கு தொலைந்துபோன மற்றும் திருடுபோன செல்போன் வழங்கப்பட்டது. மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் தொலைந்துபோன மற்றும் திருடுபோனதாக பதியபட்ட வழக்கில் 46 லட்சம் மதிப்பிலான செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் லோகநாதன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தொலைந்துபோன 326 செல்போன்கள் அதன் மதிப்பு 36 லட்சம் ரூபாய் என்றும், அதேபோல் திருடப் போன 33 செல்போன்களும் அதன் மதிப்பு 10 லட்சம் அவற்றை வழக்கின் மூலம் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 46 லட்ச ரூபாய் மதிப்பிலான 359 செல்போன்கள் இன்று ஒரே நாளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. _இதுகுறித்து காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரை சந்தித்து பேசுகையில்._ மதுரை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டது என்றும் மேலும் இந்த செல்போன்கள் அனைத்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து செல்போன் ஐ எம் இ ஐ நம்பர் மூலம் சைபர் க்ரைம் வழியாக கண்காணிக்கப்பட்டு மீட்கப்பட்டு தற்போது உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது என்றும் இதற்காக சைபர் கிராம் மூலம் காணாமல் போன அல்லது தொலைந்து போன செல்போன்களை தனிப்படை அமைத்து மீட்கப்பட்டு இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதேபோல் செல்போன் உரிய நபரிடம் ஒப்படைத்ததற்கு தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இஎம்ஐ பணம் கட்டி முடிப்பதற்குள் செல்போன் தொலைந்தது வேதனை அளித்தது தற்போது மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக செல்போன் பெற்றவர்கள் தெரிவித்தனர்.