வாகன சோதனையை ஆய்வு செய்த காவல் ஆணையாளர்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேர்தல் பறக்கும் படை சோதனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-04-10 02:50 GMT
வாகன சோதனையை ஆய்வு செய்த ஆணையர்
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் மாநகர காவல் துறையினர் வாகன சோதனையை தீவிரபடுத்தியுள்ளனர்.அந்த வகையில் நேற்று (ஏப்.9) இரவு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி மாநகர பகுதியில் நடைபெறும் வாகன சோதனைகளை நேரில் பார்வையிட்டு ஆணையாளரும் சோதனை மேற்கொண்டார். இதில் காவலர்கள் உடன் இருந்தனர்.