வாலிபரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
அருமனை அருகே வாலிபரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
Update: 2024-04-02 06:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மகன் ஆன்றோ ஷிபின். கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்யில், சம்பவத்தன்று இவர் தாயாரிடம் குடிக்க பணம் கேட்ட தாகவும், ஆனால், அவர் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ஆன்றோ ஷிபின் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்று உள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட ஆன்றோ ஷிபினை மீட்டு மேல்புறம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி செய்வதற்காக இவரது குடும்ப தோட்டம் கல்லறைத் அருமனை அருகே பனங்கரை காவடி தட்டு விளையில் உள்ளது. அந்த இடத்தில் காலையில் குழி சென்றவர்களை சிலர் இங்கே அடக்கம் செய்யக்கூடாது. என தடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கும். இடையே கலகலப்பு ஏற்பட்டது. இதனால் அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலீகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுனில் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதனால் பேச்சு வார்த்தை நிறைவு பெற வில்லை. பின்னர் போலீஸ் நிலையத்தில் அழைத்துச்சென்று சம்பந்தப்பட்ட இடத்தை அளவு செய்த பின் அடக்கம் செய்யலாம் என பேசி முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது.