தக்கலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 11:03 GMT
கமியூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மத அரசியல் செய்வதை கண்டித்தும் தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சுஜா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சைமன் சைலஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். போராட்டத்தில் நிர்வாகிகள் சந்திரகலா, ஜாண் ராஜ், ஜாண் இம்மானுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.