ஊத்தங்கரையில் கருணை கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி

ஊத்தங்கரையில் கருணை கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-28 14:06 GMT

ஊத்தங்கரையில் கருணை கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு கருணைக்கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் த.பிரபாவதி, எஸ்.திலகா, பல் மருத்துவர் ரேவதி ஆகியோர் முன்னிலை விகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் வரவேற்றார்.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் WORD NGO ம.ரமா, ROSI NGO ம.லட்சுமி, AWARD NGO க.சின்னத்தாய், GREAT NGO சி.உமாமகேஸ்வரி, CARD NGO ரூபி ஆகியோரின் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், திருமணம் சீர் வழங்க உதவுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம் நடத்துதல், கடன் உதவி பெற வழிகாட்டுதல் உட்பட பல்வேறு சேவையை பாராட்டி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு கருணைக்கரங்கள் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவலர்கள் சி.கிருஷ்ணமூர்த்தி, சி.முருகன், ஆசிரியர்கள் சம்பத், கவிதா, கஸ்தூரி, நித்யா மற்றும் தவுலத், உமா, லாவண்யா, மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

Tags:    

Similar News