அறிவியல் புதுமைக்கான போட்டி - உத்திரமேரூர் மாணவியர் சிறப்பிடம்

தேசிய அளவிலான, அறிவியல் புதுமைக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரை உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, பள்ளி தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-02-04 05:41 GMT

வெற்றி பெற்ற மாணவி 

தேசிய அளவிலான, அறிவியல் புதுமைக்கான போட்டி இணையதளம் வாயிலாக நடந்தது. இதில், நாடு முழுதும், 10 மாநிலங்களில் இருந்து 796 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கான போட்டி பெங்களூரில் நடந்தது. இப்போட்டியில் உத்திரமேரூர் 1 - 3வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் சுதர்சனா, சத்யஸ்ரீ ஆகியோர், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவியருடன் இணைந்து, பல் பலம், ஆரோக்ய விருத்தி என்ற தலைப்பில், தங்களது படைப்புகளை விவரித்து கூறியிருந்தனர். இதில், இம்மாணவியரின் படைப்பு தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுத் தொகையாக 15,000 ரூபாயும், பதக்கமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவியரை உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, பள்ளி தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் கணினி ஆசிரியை பவித்ரா, பள்ளி அறிவியல் ஆசிரியர் அன்பழகன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
Tags:    

Similar News