திருப்போரூர் அருகே மாணவர்களுக்கான போட்டி

திருப்போரூர் அருகே மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2024-06-17 14:27 GMT

திருப்போரூர் அருகே மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.


திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலை, முட்டுக்காட்டில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், மீன் வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இதில், 90 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஜம்பு தீவு பிரகடனமே, முதல் விடுதலை குரலாக பார்க்கப்படுகிறது. அந்த பிரகடனம், கி.பி., 1801ல், ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதனை நினைவூட்டி அறிந்துகொள்ளும் வகையில், மாணவ - மாணவியரிடையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப்போட்டி, பேச்சுபோட்டி மற்றும் ஓவியப்போட்டிகள், நேற்று நடந்தன. இதில், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது..
Tags:    

Similar News