சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக நிர்வாகி மீது புகார் - குடும்பத்துடன் தர்ணா
ஆண்டிப்பட்டி அருகே சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக நிர்வாகி மீது புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (40) இவருக்கு ஜோதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள் இருக்கின்றனர் இந்நிலையில் தங்களின் தாத்தாவின் சொத்துக்களை திமுகவின் நகர துணைச் செயலாளர் சின்னமாரி என்கிற தங்கமாரி அபகரிக்க முயற்சிப்பதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
மூ சுப்பையன் என்கிற ஒரே பெயரைக் கொண்ட அண்ணன் தம்பிகளுக்கு ஆண்டிப்பட்டி அருகே திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் 2 ஏக்கர் 68 சென்ட் நிலம் இருக்கின்றது இவர்களை பெரிய சுப்பையன், சின்ன சுப்பையன் என அழைத்து வந்தனர் இந்நிலையில் கடந்த 1966 ஆம் ஆண்டு சின்ன சுப்பையன் உயிரிழந்த நிலையில் பெரிய சுப்பையனின் வாரிசுதாரர்களான அவரது மகள் ராமுத்தாய் மற்றும் அவரின் கணவர் பெரிய செல்வம் என்பவர்கள் சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்கு தான் என கூறி சின்ன சுபயனின் வாரிசுதாரர்களான அவரது மகன் முருகேசன் மற்றும் பேரன் முத்து ஆகியோருக்கு சொத்துக்களின் பங்குகளை கொடுக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சக்கம்பட்டியை சேர்ந்த திமுக நகர துணைச் செயலாளர் சின்னமாரி என்கிற தங்கமாரி என்பவர் சொத்துக்களை நான் வாங்கித் தருகிறேன் எனக்கு 50 சென்ட் நிலத்தினை கொடுக்குமாறு கூறியதாகவும் அதனை நான் மறுத்ததால் எதிர்தரப்புடன் இணைந்து எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்றும் அதனை மீறி சொத்தை கேட்டு வந்தால் தந்து குடும்பத்தை கொலை மிரட்டல் செய்து விடுவதாகவும் புகார் தெரிவித்தார் இந்த நிலையில் தங்களது தாத்தாவின் சொத்துக்களில் உள்ள தங்களது பங்கினை பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்