பெரியகம்மியம்பட்டில் உணவு சரியில்லை என மனைவியை அடித்து உதைத்த கணவர் மீது புகார்
வாணியம்பாடி அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியில் உணவு சரியில்லை என மனைவியை அடித்து உதைத்த கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 14:24 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி புஷ்பராஜ் இவரது மனைவி லட்சுமி வயது 45 இந்நிலையில் லட்சுமி கணவனுக்கு உணவு பரிமாறிய பொது உணவு சரியில்லை என்று கணவன் புஷ்பராஜ் அவரது மனைவி லட்சுமியை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கிய உள்ளார்.
லட்சுமி திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து லட்சுமி காவல் நிலையத்தில்கணவன் மீது புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் புஷ்பராஜ் மீதுவழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது