வளர்ப்பு கோழிகளை விஷம் வைத்து கொன்றவர் மீது புகார்

முசிறி அடுத்த தா .பேட்டை அருகே துளையாநத்தம் மங்கலம் புதூரில் 15 வளர்ப்பு கோழிகளை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.;

Update: 2024-07-03 05:41 GMT
வளர்ப்பு கோழிகளை விஷம் வைத்து கொன்றவர் மீது புகார்

இறந்த கோழிகள் 

  • whatsapp icon
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா பேட்டை அருகே துளையாநத்தம் மங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி ( 48 ) இவர் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருவதோடு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகே ரங்கசாமிக்கு சொந்தமான 15 கோழிகள் இறந்து கிடந்துள்ளது. கோழிகளை எடுத்து பார்த்ததில் கோழிகளுக்கு சோளத்தில் மர்ம நபர் மருந்து வைத்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரெங்கசாமி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வளர்ப்பு கோழிகளை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கோழிகளை கொன்றவர் குறித்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News