பணம் திருடியதாக மேற்பார்வையாளர் மீது புகார்-போலீசார் வழக்குப்பதிவு!
நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நபர் பணத்தை திருடபட்டதாக காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை;
பணம் திருடியதாக மேற்பார்வையாளர் மீது புகார்-போலீசார் வழக்குப்பதிவு
கோவை: இந்தியா பில்ட்ர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் கோவையில் பல்வேறு இடங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ரமேஷ்(32) சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.புகாரில் கடலூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தங்களது நிறுவனத்தில் கடந்த ஏழு மாதங்களாக சைட் சூப்பரவைசர் பணியாற்றி வந்ததாகவும் அவரது நடவடிக்கைகள் சரியில்லாத காரணமாக பணியில் இருந்து நீக்கயதாக குறிப்பிட்டுள்ளார்.பணியில் இருந்து விலகிய அய்யப்பன் தங்கி இருந்த அலுவலக அறைக்கு வந்தவர் அங்கிருந்த பீரோவை உடைத்து 5,23,700 ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.