இலவச சேவைக்கு தொகை கோரினால் புகார் தெரிவிக்கலாம் - ஆட்சியர்

Update: 2023-12-11 04:04 GMT

 மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூகநலத்துறை மற்றும் நகராட்சி அலுவலங்கள், பேரூராட்சி அலுவலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலங்களிலும் இடைத்தரகர்கள் முகாமிட்டு இருந்து வருவதாகவும், அரசு அலுவலங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் மனுதாரர்களையும், திட்டங்களின் பயன்பெற வேண்டி வரும் பொதுமக்களையும் குறி வைத்து இடைத்தரகர்கள் செயல்படுவதாகவும், அரசு அலுவலங்களில் கட்டணமில்லாமல் கிடைக்கும் சேவைகளையும், திட்டங்களின் பயன்களையும் பெற வரும் பொதுமக்களிடம், அரசு அலுவலர்களை தங்களுக்கு நன்கு தெரியும் எனத் தெரிவித்தும், அரசின் பயன்களை அரசு அலுவலர்களிடமிருந்து விரைவாக பெற்று தருவதாக தெரிவித்து பொதுமக்களிடமிருந்து பெருமளவு பணம் பறித்து வருவதாகவும், இம்மாதிரியான இடைத்தரகர்கள் அதிகாரிகளையே புகார் செய்யும் அளவுக்கு பெருகிவிட்டார்கள் என நீண்ட காலமாக தொடர்ந்து புகார்களானது பத்திரிக்கைச் செய்திதாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

மேலும் தொடர்ந்து தினசரி பத்திரிக்கைகளிலும் இம்மாதிரியான செய்திகள் வருவதாகவும். மேற்படியான புகார்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில், அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது என்றும், அவ்வாறு இடைத்தரகர்களை அனுமதித்து அவர்கள் மூலமாக கடித போக்குவரத்தில் ஈடுபடுவதாகவோ அல்லது பிற வகையான பணிகளில் ஈடுபடுவதாகவே தெரிய வரும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் மீது அல்லது துறை தலைவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட பிரிவு கண்காணிப்பு அலுவலரையோ அல்லது துறை தலைவரையோ நேரடியாக அணுகி, அவர்களது கோரிக்கைகள் மற்றும் திட்டம் சார்ந்த பயன் குறித்தான தகவல்களை கேட்டு பெற வேண்டும் என்றும், அரசு அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத மூன்றாம் நபர்கள் மூலமாக அணுக வேண்டாம் என்றும், அரசின் பயன்களை பெற தங்களிடம் யாராவது தொகை கோரினால் அது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலரிடமோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்திலோ புகார் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News