உணவு கெட்டுப் போனதாக புகார் - ஹோட்டலில் அதிகாரிகள் ஆய்வு

அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஹோட்டலில் கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2024-05-29 06:29 GMT
அழகியமண்டபம் ஒட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வெள்ளாங்கோடு ஊராட்சி கவுன்சிலர் சிதறால் பகுதியை சேர்ந்த வினோத் நண்பர்களுடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது மாட்டுக்கறியில் கெட்டுப்போன வாசனை வந்ததாக கூறப்படுகிறது.     இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஓட்டலில் புகார் கூறியும்  கண்டுகொள்ளாத நிலையில், வினோத் நண்பருடன் காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். அப்போது  வழியில் வாந்தி எடுத்துள்ளார்.   

பின்னர் ஒரு தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான வினோத் தான் எடுத்து வந்த மாட்டுக்கறி பொட்டலத்தோடு நேரடியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சென்று புகார் அளித்தார். மேலும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அனுப்பி உள்ளார்.     இதை அடுத்து உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் நேற்று அழகிய மண்டபத்தில் உள்ள சம்பந்தப்பட்ட ஓட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி  வைத்ததோடு ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.

Tags:    

Similar News