நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவல் அலுவலகத்தில் புகார் மனு !!!

பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில், மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.;

Update: 2024-06-01 04:57 GMT

 புகார் மனு

பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில், மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு. பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகுரு தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மே 31ம் தேதி புகார் மனு அளித்தனர்.

அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரை குறித்து பாஜக வைச்சேர்ந்த திருச்சி சூர்யா என்பவர் கடந்த மே-28 ஆம் தேதி தனியார் யூடியூப் சேனலில் அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடபட்டிருந்த புகார் மனுவினை, அளித்து சென்றனர்.

Advertisement

இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி இணைச் செயலாளர் சதிஸ்குமார், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் விஜய் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் ,வடகரை ராஜேந்திரன் ,ஜெயச்சந்திரன் மற்றும் சதிஸ்குமார் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News