உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகார் - பிரபல உணவகத்தில் ஆய்வு

நாகூரில் பிரபல உணவகத்தில் வாங்கிய பர்கரில் பூஞ்சை பாதிப்பு இருந்ததாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தயாரிப்பு விபரம் இல்லாத 16 பாக்கெட் பன்னை கைப்பற்றி அழித்தனர்.

Update: 2024-02-18 09:34 GMT

ஆய்வு 

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் வழியாக இன்று வரப்பட்ட புகாரையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ்  உத்தரவின்படி நாகூர் தர்க்கா அருகில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றுள்ளனர். புகார்தாரர் இந்த உணவகத்தில் வாங்கிய " பர்கர் " என்ற உணவில் பூஞ்சை காளான் இருந்தது எனவும் இதனை சாப்பிடுவதால் உடல்நலம் கெடும் எனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவக பணியாளர்களிடம் கேட்டதற்கு மரியாதையின்றி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகவும் வரப்பட்ட புகார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட புகார் உண்மையென உணவகத்தின் பொறுப்பாளர் ஒத்துகொண்டு வருத்தம் தெரிவித்தார்.

" பர்கர் " தயாரிக்க பயன்படுத்தப்படும் பன் ஆய்வு செய்யப்பட்டது. கெட்டுப்போகாமல் இருந்தது. ஆனால் முழுமையான தயாரிப்பு விபரம் இல்லாததால் 16 பாக்கெட்டுகள் ( 1.5 கிலோ ) பன் கைப்பற்றப்பட்டு, குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. உணவு தயாரிக்கும் இடம் மற்றும் பரிமாறும் இடம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருந்தது. முழுமையான தயாரிப்பு விபரம் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட வேண்டும், பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பாதுகாப்பான உணவு விற்பனை தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையரக வாட்ஸ்அப் புகார் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News