கட்டிட அனுமதி கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து நகராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார்
நகர மன்ற தலைவர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஹோட்டலுக்கு கட்டிட அனுமதி தர வேண்டும் என கேட்டு மிரட்டினர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நகர மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்;
Update: 2024-02-15 09:07 GMT
காவல் நிலையத்தில் புகார்
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது கூறியதாவது, சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு முருகேசன் என்பவர் குத்தகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். குத்தகைக்கு எடுத்தவருக்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் நகராட்சி சேர்மன் ஆகிய எனது அலுவலகத்திற்குள் நுழைந்து ஹோட்டலுக்கு கட்டிட அனுமதி தர வேண்டும் என கேட்டு மிரட்டினர். கட்டிட அனுமதிக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகவும் என விளக்கியும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டலும் விடுத்தனர் இதை தட்டி கேட்ட எனது கணவர் நாட்டான் மாதுவையும் தாக்க முயற்சித்தனர். எனவே திட்டிய மற்றும் எங்களை தாக்க முயன்ற நபர்கள் மீது காவல்துறை தக்க விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.