ஜமாபந்தி நிறைவு; 336 மனுக்கள் குவிந்தன
நாகை மாவட்டம் கீழ்வேளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவடைந்தது; மொத்தம் 336 மனுக்கள் குவிந்தன.
நாகை மாவட்டம் கீழ்வேளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு . 336 மனுக்கள் குவிந்தது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார்.ஜமாமந்தி நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்வேளூர், தேவூர், கீழையூர், வேளாங்கண்ணி சரகங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 336 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் பட்டா, மாறுதல், வீட்டுமனை பட்டா, சிட்டா நகல் , முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் 13 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார் வெற்றி செல்வன், துணை தாசில்தார் வித்யா , வருவாய் ஆய்வாளர்கள் கார்த்தி, சசிகலா, சக்தி மனோகர், மேகலா கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.