சேலத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற உறவினர்களால் பரபரப்பு.;
Update: 2024-03-26 02:16 GMT
தற்கொலை
சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 33). கம்ப்யூட்டர் ஆபரேட்டரான இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடன் மற்றும் உடல்நலக்குறைபாட்டால் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.