வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்கான கணினி மூலம் சுழற்சி முறை

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்களவைத் தேர்தல் -2024-முன்னிட்டு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்கான கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

Update: 2024-04-08 15:34 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று , தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், முன்னிலையில், மக்களவைத் தேர்தல் -2024-முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதி, 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு பதிவு அன்று பயன்படுத்திட 1,628 வாக்குசாவடிகளில் 4,884 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் 1,130 இயந்திரங்கள் என மொத்தம் 6,014 இயந்திரங்கள் முதற்கட்டமாக இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி 22.3.2024 அன்று நடைபெற்றது. நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். இதனையொட்டி வாக்கு பதிவிற்கு கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பதற்காக இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 626, 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு -680, 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு 692, 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 608, 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு 626, 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 334 என மொத்தம் 3,566 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 5,516 எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU), 1,950 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CU), 2,114 எண்ணிக்கையில் வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தொடர்ந்து, கூடுதலாக வரப்பெற்ற மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பகிர்ந்தளிக்கும் பணி நடைபெற்றது.
Tags:    

Similar News