நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு வார விழா
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதி விளக்க உரையாற்றினார்.
Update: 2024-04-10 10:10 GMT
நீதிமன்றத்தில் வழக்காடுதல் மூலம் வழக்கு நடைபெறும் பொழுது பல ஆண்டுகள் சிவில் வழக்குகள் நடைபெறும். ஆனால் நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையங்கள் மூலம் எதிர் தரப்புடன் வழக்கு தொடர் இருப்பவர்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியும். அப்பொழுது இரண்டு தரப்பும் ஒப்புக் கொள்கிற தீர்வுகளை எட்ட முடியும். மேலும் சமரச மையங்களில் எந்தவித மேல்முறையிடும் இல்லாமல் விரைவாகவும் இறுதியாகவும் சுமுகத்தேர்வு கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படுகின்றன. சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி துவங்கி 12ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் , எம்.கே மாயகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி கவிதா ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமரச மையம் குறித்து நீதிபதிகள் விளக்கமாக எடுத்து உரையாற்றினர். சமரச மையத்தின் வழக்கறிஞர் சீனிவாசன், மோகன், அரசு தரப்பு வழக்கறிஞர் இராம.சேயோன், மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகதராஜ், சங்கமித்திரன், வேலு குபேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.