திமுக பிரதிநிதிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மே 16ஆம் தேதி மாலை திமுக பிரதிநிதிகளின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரஞ்சியில் செலுத்தி மரியாதை செய்தார்.;
Update: 2024-05-17 07:17 GMT
அஞ்சலி செலுத்திய போது
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் எட்டாவது வார்டில் திமுக பிரதிநிதி அன்பழகன் மனைவி செல்லம்மாள் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகர் , 14 வது வார்டு திமுக கிளை நிர்வாகி மணிகண்டன் தந்தை வடிவேல் மறைவையொட்டி அவரது இல்லம் சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.இதனை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சிகளின் போது திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.