பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல்

அத்திப்பள்ளத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த கார்த்திக் ராஜா குடும்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.;

Update: 2024-05-21 07:23 GMT
பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல்

அத்திப்பள்ளத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த கார்த்திக் ராஜா குடும்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.


  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள வானதிராயன்பட்டி ஊராட்சி அத்திப்பள்ளத்தை சேர்ந்தவர் வேல்முருகன் இவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் வெடி விபத்தில் வேல்முருகன் அவர்களது தம்பி கார்த்திக் என்கிற கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மேலும் இருவர் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு குடோன் உரிமையாளர் வேல்முருகன் மற்றும் சகோதரர் கார்த்திக் இருவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனையறிந்த, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் தலைமை கழகத்தில் இருந்து இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றிய கலை பிரிவு செயலாளர் வேல்முருகன் அவருடைய சகோதரர் கார்த்திக் அவர்கள் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்து விட்டார். இச்செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு சகோதரரை இழந்து ஆற்றோன்னா துயரத்தில் வாடும் அன்பு சகோதரர் வேல்முருகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் திரு.கார்த்திக்ராஜா அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News