நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்!
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மிகவும் அபாயகரமானது.இவை மற்ற மீன்களை தின்று முற்றிலும் அழித்து விடும். ஆப்பிரிக்கன் மீன்களால் உடல் நலம் பாதிக்கும், இதனால் இத்தகைய மீன்களை அரசு தடை செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் படி நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை,R.P.புதூர், உழவர் சந்தை, பூங்கா சாலை, மோகனூர் சாலை,பரமத்தி சாலை, நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, ஆய்வாளர் கலைச்செல்வி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முருகன், நாமக்கல் நகராட்சி துப்பரவு அலுவலர் திருமூர்த்தி, விலங்குகள் வதை தடுப்பு உதவி ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குழித்தோண்டி மீன்களை அழித்தனர்.தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு நாமக்கல் பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்த நிலையில் தடை செய்யப்பட்ட மீனான ஆப்ரிக்கன் கெளுத்தி மீனை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வியாபாரிகளிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மிகவும் அபாயகரமானது.இவை மற்ற மீன்களை தின்று முற்றிலும் அழித்து விடும். ஆப்பிரிக்கன் மீன்களால் உடல் நலம் பாதிக்கும், இதனால் இத்தகைய மீன்களை அரசு தடை செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.