மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்!
செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-05-28 08:14 GMT
பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஷாபுதீன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்று படுகையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபர், போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.மேலும், தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.