மது பாட்டில்கள் பறிமுதல் !

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 12 தினங்களாக 4583 பாட்டில்கள் பறிமுதல் மாவட்ட காவல் துறை நடவடிக்கை

Update: 2024-03-28 12:22 GMT

காவல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கடந்த 16ம்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை ஆண் மண் ரககட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு, காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில் 27.03.2024 வரை 144 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 146 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மதுவிலக்கு குற்றவாளிகளிடமிருந்து 5195 லிட்டர் பாண்டி சாராயம், 4257 பாண்டி மதுபான பாட்டில்கள், 326 தமிழ்நாடு மதுபான பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 9626169492 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
Tags:    

Similar News