உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-09 15:34 GMT
பணம் ஒப்படைப்பு
சிவகங்கை அருகே உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் சிவகங்கை மண்டல துணை வட்டாட்சியர் லெனின் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காரில் வந்த கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி மாதவி என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் 52 ஆயிரத்து 860 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு சென்ற நிலையில் அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள கருவுலகத்தில் சிவகங்கை மண்டல துணை வட்டாட்சியர் லெனின் ஒப்படைத்தார்.