கடத்தப்பட்ட புகையிலை மூட்டைகள் பறிமுதல்
தென்காசியில் கடத்தப்பட்ட புகையிலை மூட்டைகள் பறிமுதல் செய்து இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த மினி லாரியில் 17 மூடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இந்த புகை யிலை மூடைகளை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்வதற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த கேரளா மாநிலம் புனலூர் நிரப்பத்து, மாத்தரபோஸ்ட் லட்சுமி பவனைச் சேர்ந்த அருள் வளவன் (வயது 30), தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மினி லாரியின் உரிமையாளர் சக்திவேல் முருகன் (வயது 35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் குஜராத்தில் இருந்து கடல் மார்க்கமாக திருவனந்த புரத்திற்கு கொண்டு வரப்பட்ட புகையிலை மூடைகளை மினி லாரியில் தமிழகத்திற்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந் துள்ளது. அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் புகையிலை மூடையையும் பறிமுதல் செய்த போலீசார் புகையிலை கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.