பறக்கும் படை சோதனையில் ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் பறிமுதல்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ரூபாய் 1,23,200 பறிமுதல்.
Update: 2024-03-20 11:47 GMT
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும்படை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன.மார்த்தாண்டம் பஸ் நிலையம் பகுதியில் இன்று காலை பறக்கும் படை துணை வட்டாட்சியர் லீலா பாய் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 200 சிக்கியது. அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.